தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க ஆரம்பித்துவிட்டது. இதற்கு மத்தியில் தமிழ்நாட்டில் வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சியால் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்தவகையில் நேற்று சென்னையில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் போல தேங்கி காட்சியளிக்கிறது. இவ்வாறு தமிழ்நாட்டின் பல இடங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் மாதம் முதல் நேற்று வரை எதிர்பார்த்த மழை அளவை விட 78 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது ஜூன் வரையிலான கால கட்டத்தில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மழையின் இயல்பு அளவு 87.7 மி.மீ, ஆனால் 155.8 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது. வரும் நாட்களில் மழை பொழிவு குறைந்தால் இந்த சதவீதம் குறை வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.