நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதில் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ள. இதையடுத்து முழு ஊரடங்கு காலகட்டத்தில் மின்கட்டணத்தை அபராதம் இல்லாமல் செலுத்த அவகாசம் அளிக்குமாறு நுகர்வோர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.இதையடுத்து மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்னைலயில் முழு ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதரம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ஊரடங்கால் முற்றிலும் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களின் பெருஞ்சுமையைக் குறைக்க, மின்சாரக் கட்டணத்தை இரண்டுமாத காலத்திற்கு ரத்து செய்ய வேண்டும் என்று சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.