நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனாவை தடுப்பதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு மத்தியில் ஒரு சில மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஊரடங்கின் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு சில இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்துவரும் குஜராத் மாநிலம் அகமதாபாத், ராஜ்கோட், சூரத், வதோதரா பகுதிகளிலும், பஞ்சாப் மாநிலம் ரூப் மாவட்டத்திலும், மறு அறிவிப்பு வரும்வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. கொரோனா நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ள நிலையில் தமிழகத்திலும் இரவு ஊரடங்கு அமலாகலாம் என்று கூறப்படுகிறது.