கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது. அதன்பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்ததால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்த நிலையில் சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை பி எப்7 கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. இதனால் தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த வாரம் ஒற்றை இலக்கத்தில் பதிவான கொரோனா, இந்த வாரம் இரட்டை இலக்கத்தில் பதிவாகிறது. ஜனவரி மாத மத்தியில் கொரோனா உச்சம் தொடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில், பண்டிகை காலங்களில் கட்டுப்பாடு விதிப்பது, இரவு நேர உரடங்கு அமல்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விரைவில் அரசு ஆலோசனை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.