Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இரவு 10 மணி முதல் ஊரடங்கு?…. புதிய அதிர்ச்சி….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.

ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் பொதுமக்கள் கூடும் பூங்கா, சுற்றுலா தளங்களுக்கு தடை விதிக்க மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு விதிக்கவும் வலியுறுத்தியுள்ளனர். ஏற்கனவே முழு ஊரடங்கு விதிக்க பரிந்துரை செய்த நிலையில் பொருளாதார காரணத்தினால் இரவு ஊரடங்கு விதிக்க வலியுறுத்தினர்.

Categories

Tech |