பாஜக கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்த உலகத்திலேயே மிகப் பெரிய கட்சி என்பது பாரதிய ஜனதா கட்சி, 18 கோடி பேர் உறுப்பினராக இருக்கின்றோம். அந்த கட்சியினுடைய ஒரே ஒரு தலைவர் தேசிய தலைவர், சாதாரணமாக ஒரு ஊருக்கு வருவது கிடையாது திருப்பூருக்கு அந்த பாக்கியம் கிடைத்திருக்கிறது.
நம்முடைய அகில இந்திய தலைவர் திரு ஜே.பி நட்டாஜி அவர்கள் திருப்பூருக்கு வருகை தந்து, நம்முடைய புதிய கட்டிடத்தை திறப்பதற்காக வந்திருக்கின்றார். இங்கே இருக்கக்கூடிய டாலர் நகரத்தினுடைய கடினமான உழைத்து திருப்பூரை இந்த உலக வரை படத்திலேயே பதித்த உங்களுடைய பாதத்தை தொட்டு வணங்கி உங்களுடைய சார்பாக நம்முடைய ஜேபி நட்ட அவர்களை இங்கே வரவேற்கின்றேன்.
அதேபோல உங்களுக்கு தெரியும் நம்முடைய எஸ்.ஆர்.சேகர் சொன்னது போல ஒரு சாதாரண நாமக்கல்லில் ஒரு செருப்பு தைக்க குடும்பத்திலே… அவருடைய தாத்தா செருப்பு தைக்கின்ற குடும்பத்திலேயே இருந்தவர்…. அவருடைய தந்தையார் விவசாயி வேலை செய்பவர்… அந்த குடும்பத்திலேயே கோளூரிலே பிறந்து பாரதிய ஜனதா கட்சியால் கண்டிக்கப்பட்டு, படிப்படியாக ஒவ்வொரு நிலையாக உயர்ந்து, மாநில தலைவராக இருந்து 20 ஆண்டுகாலம் பாரதிய ஜனதா கட்சிக்கு சட்டமன்றத்திலேயே வாய்ப்பில்லை என்ற பொழுது,
அதை வேலேடுத்து உடைத்து நான்கு முத்தான எம்எல்ஏக்களை சட்ட மன்றத்திற்கு அனுப்பி வைத்து, அதற்கு வெகுமதியாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடிஜி சபையிலே இன்று மந்திரியாக வீற்றிருக்கக்கூடிய முருகன்ஜி அவர்களே… அதேபோல உங்களுக்கு தெரியும்… இதற்கு முன்னால் அம்மா அவர்கள் இருந்தபோது நயினார் நாகேந்திரன் அவர்கள் மிகப்பெரிய ஒரு மந்திரியாக இருந்தவர். திருநெல்வேலியில் அந்த கோட்டையிலே மிகப்பெரிய அரசியல் தலைவராக இருக்கக் கூடியவர்…
அதையெல்லாம் விட்டுவிட்டு நரேந்திர மோடிஜி அவர்கள் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து நான்கில் ஒரு எம்எல்ஏ வாக இருந்து சட்டமன்றத்திலேயே பாஜகவினுடைய தலைவராக இருக்ககூடிய நயினார் அவர்களே.. அதே போல சி.டி.ரவிஜி அவர்கள் சிக்குமங்கல்லூரில் எம்.எல்.ஏ வாக இருந்து, மந்திரியாக இருந்து கட்சிப் பணிக்காக மந்திரி வேலையை உதறிவிட்டு முழு நேர கட்சியை பணி செய்யக் கூடிய அகில இந்திய பொதுச் செயலாளராக இருந்து தமிழ்நாட்டினுடைய பிரபாரியாக இருக்கக்கூடிய சி.டி.ரவிஜி அவர்களே….
ஆந்திராவில் பிறந்து இருந்தாலும் கூட அவருடைய உயிரும் உள்ளமும் உடலும் தமிழகத்தில் தான் இருக்கிறது சுதாகர்ரெட்டிஜி அவர்களே…. உங்களுக்கு தெரியும் பொன்ராதா அண்ணன் என்றால் குட்டி காமராஜர் என்று சொல்லுவோம், கொள்கை பிடிப்பு கொண்டவர், முன்னாள் மாநிலத் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன் அவர்களே….
அதேபோல தர்ம போராளி என்றால் தமிழகத்தில் ஒரே ஒருவர் தான் மட்டும் தான் எங்களுடைய அண்ணன் எச். ராஜாஜி அவர்களே…. அதேபோல அக்கா வானதி அவர்கள் சாதாரண பதவியில் கிடையாது. 63 கோடி பெண்கள் இந்தியாவில் இருக்கின்றார்கள், மிகப் பெரிய கட்சியாக பாரதிய ஜனதா கட்சி இருக்கின்றது, அந்த கட்சியினுடைய அகில இந்திய தலைவியாக இங்கே இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களுக்கும் அகில இந்திய தலைவியாக இருந்து, தன்னுடைய கட்சி பணியை செய்து கொண்டிருப்பவர்கள் வானதி அவர்களே என வாழ்த்தி பேசினார்.