தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு 2வது கட்டமாக கப்பலில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதனையடுத்து இலங்கைக்கு 2வது கட்டமாக தமிழ்நாட்டிலிருந்து கப்பலில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்கும் பணியை அமைச்சர்கள் சக்கரபாணி, செஞ்சி மஸ்தான், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து VTC SUN கப்பல் மூலம் நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு செல்கின்றன. 14,700 டன் அரிசி, 250 டன் பால் பவுடன், 60 டன் மருந்து உள்பட மொத்தம் 15,010 டன் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.