தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. ஆனால் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டது. அதனால் மக்களும் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு இருமடங்கு அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,53,447ஆகவும் 27 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 54,15,137 ஆகவும் உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பதால் தமிழக அரசு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து விரைவில் ஆலோசனை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.