Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை தொடரும்… ஆளுநர்…!!!

தமிழக சட்டசபை கூட்டத்தில் பேசிய ஆளுநர் இருமொழிக் கொள்கையை தமிழகத்தில் தொடரும் என தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்திற்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சமூக இடைவெளியை பின்பற்றி சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வருடத்தின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் ஆரம்பித்தது. அவர் பேசத் தொடங்கியதும் ஆளுநரை உரையாற்ற விடாமல் எதிர்க்கட்சிகள் கூச்சலிட தொடங்கின. அனைத்து விவகாரங்கள் குறித்தும் பேசலாம்,எதிர்க்கட்சிகள் கூட்டத்தொடருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஆளுநர் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் ஆளுனர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் இருந்து திமுக வெளிநடப்பு செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆளுநர் உரையாற்ற தொடங்கினார்.அதில், “முதல்வரின் உதவி மையத்தின் 1100என்ற எண்ணிற்கு அழைத்தால் வீட்டிலிருந்து அரசின் சேவைகளை விரைவில் பெற்றுக்கொள்ள முடியும். இலங்கை கடற்படை காவல் கொண்டு மோதியதில் தமிழக வீரர்கள் 4 பேர் உயிரிழந்ததை தமிழக அரசு வன்மையாக கண்டிக்கிறது. புயல் பாதிப்பு களுக்கு தேவையான நிதியை மத்திய அரசு விரைந்து வழங்க வலியுறுத்தியுள்ளோம். விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க வேளாண் மண்டலத்தை அறிவித்தவர் முதல்வர்.

கொரோனாவை எதிர்கொள்ள அரசு இயந்திரங்களை திறம்பட ஒருங்கிணைத்த பெருமை முதல்வரை சேரும். மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் 435 மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். தமிழ்மொழியின் பெருமையை வளர்ப்பதே இந்த அரசின் முதன்மை குறிக்கோளாக உள்ளது. தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை தொடரும். தமிழகத்தை நாட்டிலேயே தலை சிறந்த மாநிலமாக ஆக்கும் இலக்கினை கொண்டு அரசு விரைந்து செயல்பட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |