தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் கடைகள் மூலமாக மலிவு விலையில் மளிகை பொருட்கள், இலவச அரிசி ஆகியவற்றை பெற்று பயன் அடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசு நிவாரண உதவிகளும் இதன் மூலமாக வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டு என்பது அனைத்து வேலைகளுக்குமே அவசியமான ஒன்றாக இருக்கிறது. மேலும் இருப்பிட சான்று ஆவணமாகவும் இது எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதனால் பெரும்பாலான மக்கள் ரேஷன் கார்டுகளை பெற விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரேஷன் கார்டு தொடர்பான விதிமுறைகள் மாற்றப்பட உள்ளதாகவும் அதனால் இனி தகுதி பெற்றவர்கள் மட்டுமே ரேஷன் பொருட்களை பெற முடியும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் தமிழகத்தில் இலவச அரிசி வழங்கப்பட மாட்டாது என்று தகவல் வந்துள்ளது. இது குறித்து பேசி தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் , மத்திய அரசு உத்தரபிரதேச மாநிலத்திற்கு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு கறீப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கும் அரிசி கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளதால் இலவச அரிசி திட்டம் தமிழகத்தில் ரத்து செய்யப்படுமோ என்ற அச்சம் தேவையில்லை என்று கூறியுள்ளார்.