தமிழக அரசால் இல்லம் தேடி கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கு குழந்தைகள் செல்வதை உறுதி செய்வதன் நோக்கமாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த திட்டமானது கிராமப்புறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இந்த திட்டத்தை விளக்கும் விதமாக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இது குறித்து பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை உறுதி செய்வதை நோக்கமாக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு எந்த ஒரு பட்டதாரியாக இருந்தாலும் பாடம் நடத்தலாம் என்ற வகையில் தன்னார்வலர்களை தேடி வருகிறோம். பலர் இந்த திட்டத்திற்கு சேர பதிவு செய்துள்ளார்கள் அவர்கள் தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. சமுதாயத்திற்காக உங்களை நீங்கள் அர்ப்பணிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள கிராம முதல் மாநகரப் பகுதிகளில் படித்த இளைஞர்கள் யாராக இருந்தாலும் தொண்டுள்ளதுடன் இந்த திட்டத்தில் பங்கேற்கலாம் என்று தெரிவித்துள்ளார்.