Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் இளநிலை கால்நடை மருத்துவ படிப்பு பொது கலந்தாய்வு”… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!!!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி போன்ற ஏழு இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கல்லூரிகளில் இளநிலை கால்நடை மருத்துவ படிப்பில் இந்த வருடம் 580 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு போன்ற நான்கு கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டான 15 சதவீதம் என மொத்தம் 63 இடங்கள் ஒதுக்கப்படுகின்றது.

அதில் தமிழகத்திற்கு மொத்தம் 517 இடங்கள் உள்ளது. இந்த சூழலில் இந்த படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பதிவு செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்கி அக்டோபர் மூன்றாம் தேதி நடந்து முடிந்திருக்கின்றது. மேலும் விண்ணப்பித்தவர்களின் விவரங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தரவரிசை பட்டியல் அக்டோபர் 20ஆம் தேதி வெளியாகியுள்ளது. அந்த வகையில்  கால்நடை மருத்துவ படிப்பிற்காக பொது கலந்தாய்வு இந்த வாரம் தொடங்கும் என துணைவேந்தர் செல்வகுமார் அறிவித்திருக்கிறார். மேலும் மொத்தம் உள்ள 580 இடங்களுக்கு இந்த வருடம் சேர்க்கை நடத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |