தமிழகத்தில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே ஜனவரி 16 ஆம் தேதி இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இதனை அடுத்து இந்தியாவின் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து கொரோனா தடுப்பு ஊசி தமிழகம் வந்ததைத் தொடர்ந்து முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் ஜனவரி 16 ஆம் தேதி இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மற்றவர்களுக்கு அடுத்து வரும் நாட்களில் போடப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் கொரோனா தடுப்பூசியால் சிறு பக்க விளைவுகள் ஏற்பட்டததால் ஒப்புதல் தரப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.