Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இவர்களுக்கு பூஸ்டர் டோஸ் கட்டாயம்…. அமைச்சர் மிக முக்கிய தகவல்…..!!!!!

தமிழகத்தில் கொரோனா மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதனால் தடுப்பூசி செலுத்தாதவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிறு குறு, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களில் பணியாற்றும் 18 முதல் 59 வயதுடைய தொழிலாளர்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுவது குறித்து ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி கொரோனா தடுப்பூசி வழங்கும் பணியானது தமிழகம் முழுவதுமாக செயல்படுத்தப்படுகிறது. கொரோனா 4 ஆவது அலையை எதிர்கொள்ள சிறு, குறு, பெரிய தொழிற்சாலைகள், பெரிய கடைகள் மற்றும் பெரிய உணவகங்களின் பணிபுரியும் 18 முதல் 59 வயது வரை தொழிலாளர்கள் அவர்கள் குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் போஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள ஊக்குவிக்க வேண்டும். அனைவரும் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வரை கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம் என்று கூறினார்.

Categories

Tech |