Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இவர்களுக்கு கறவை மாடு வாங்க மானியம்…. அரசு வெளியிட்ட சூப்பர் உத்தரவு….!!!!

முன்னதாக நடந்த சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு கறவை மாடுகள் வாங்க மானியம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள 500 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு ரூபாய் 7.50 கோடி செலவில் கறவை மாடுகள் வாங்குவதற்கு 2.25 கோடி மானியம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக மக்களுக்கு கறவை மாடு வாங்க மாநில அரசு நிதியிலிருந்து 50 பழங்குடியின மக்களுக்கு 22.50 லட்சம் வழங்கப்படுகிறது.

Categories

Tech |