தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் சீர்மிகு சட்டப்பள்ளியில் படித்தவர்களுக்கு ரூ.3,000 உதவித் தொகை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசால் நிர்வாகிக்கப்படுவதால் சீர்மிகு சட்டப்பள்ளியில் படித்தவர்களுக்கு நிதியுதவி தர வேண்டும் என கூறியுள்ளனர்.