கடந்த 2016ஆம் வருடம் மாற்றுத்திறனாளிகள் உரிமைகல உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள், ரயில் மற்றும் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறி செல்லும் படி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி மாற்றுத்திறனாளிகள் பேருந்துகளில் ஏறும் வகையில் கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று வைஷ்ணவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததையடுத்து தமிழகத்தில் இனி மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் இல்லாமல் புதிய பேருந்துகள் வாங்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் அரசுக்கு தடைவிதித்து வழக்கு 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.