ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத்துறை நிலங்களை தனியாருக்கு வழங்கினாலும் அந்த நிலங்களின் உரிமை தொடர்ந்து அரசிடமே இருக்கும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார். நிதி அயோக் சார்பில் அரசு நிலங்களை தனியாருக்கு குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கி வரும் வகையிலான தேசிய பணம் ஆதாரம் வழிமுறைகளை டெல்லியில் வெளியிட்டார்.
அதாவது பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் 6 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர். அரசு நிலங்களை தனியாருக்கு வழங்கப்பட்டாலும் நிலங்களின் உரிமை தொடர்ந்து அரசிடமே இருக்கும் என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.