பொதுமக்களின் வசதிக்காக இதில் கூடுதலாக 42 சேவைகள் இணைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது என தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இயக்க அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இயக்கம் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வாயிலாக அரசு இ-சேவை மையங்களை நடத்துகிறது. இந்த மையங்களில் வருமான சான்றிதழ் வாக்காளர் அடையாள அட்டை சாதி சான்றிதழ் உட்பட 134 சேவைகள் வழங்கப்படுகிறது.
மேலும் பல சேவைகளை இணைக்கும் பணி நடந்து வருகிறது. இது இதுபற்றி தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அதிகாரிகள் கூறிய போது, இ சேவை மையங்களில் ஆதார் வாயிலாக பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் வசதி அறிமுகமாகியுள்ளது. மேலும் 134 சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் 42 புதிய சேவைகளை இணைக்கும் பணி நடந்துகொண்டிருக்கிறது. விரைவில் 176 சேவைகளை இ சேவை மையங்கள் வாயிலாக பொது மக்கள் பெற முடியும். மேலும் அடுத்த கட்டமாக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 6 சேவைகள் பள்ளிக்கல்வித்துறையின் 23 சேவைகள் என 29 சேவைகளையும் இ சேவையில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.