Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் உச்சகட்ட அதிர்ச்சி….! நடுக்க வைத்த கொரோனா இறப்பு..!

தமிழகத்தில் இன்று 108 கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவாக மேலும் 108 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,349 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 5,063 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 2,68,285 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,023 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் 1,04,027 ஆக எகிறியுள்ளது. இன்று புதிதாக 6,112 குணமடைந்து வீடு திரும்பியதால், 2,08,784 கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தமிழக்தில் தற்போது வரை 55,152பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் நேற்று இல்லாத உச்சமாக 109 இறப்பும், இன்று 108 இறப்பு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |