தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 9 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் . அனைவரையும் முகக்கவசம் அணிய வலியுறுத்தி வருகின்றனர். முக கவசம் அணியாமல் வெளியில் செல்பவர்களுக்கு ரூபாய் 200 அபராதமும் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது.
இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் 9,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிகப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 80 ஆயிரத்து 728 ஆக உயர்ந்துள்ளது. டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 2 ஆயிரத்து 22 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 39 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 71 உயிரிழந்துள்ளனர்.