தமிழகத்தில் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கொரோனா சிகிச்சை மையங்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களை கவனிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தொடர்ந்து பற்றாக்குறை நிலவி வருகிறது.
இந்நிலையில் வெளிநாடுகளில் மருத்துவம் படித்த 500 பேர் தமிழகத்தில் மருத்துவ பணிகளை தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. முன்பு மருத்துவ கல்வி இயக்குனரகம் கீழ் ஓராண்டு பணி புரியும் நபர் மட்டுமே மருத்துவப் பணி மேற்கொள்ள முடியும். கொரோனா அதிகரித்து வரும் நிலையில் வெளிநாட்டில் படித்த 500 பேருக்கும் உடனடியாக பணி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.