தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன.இந்நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட அல்லது பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்கு சேமநல நிதியில் உள்ள பாக்கித் தொகை வழங்கப்படும். இதற்காக தமிழ்நாடு பொது சேமநல நிதி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த திருத்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருத்தப்பட்ட விதிகள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.