Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் உடனே – முதல்வர் பழனிசாமி உத்தரவு …..!!

தமிழகத்திற்கு Finger Pulse Oximeter  மருத்துவ கருவிகளை வாங்குவதற்கு முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி நிலையிலும் தமிழக அரசு பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன் விளைவாக தலைநகர் சென்னையில் தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. ஆனாலும் கூட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு மருத்துவ உபகரணங்கள், மருத்துவ கருவிகள் என ஏராளமாக கொள்முதல் செய்ய தமிழக அரசு ஆணை பிறப்பித்து வருகின்றது.

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு நடவடிக்கையாக தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்சி மீட்டரை அதிக அளவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 43,000 Finger Pulse Oximeter  கருவிகள் கொள்முதல் செய்ய ஆணை வெளியிட்டு, 23000 கருவிகள்  பெற்றுள்ளதாக கூறியுள்ளார். நோயாளிகளுக்கு இரத்த ஆக்சிஜன் அளவை கணக்கிட இந்த கருவி பயன்படுகிறது.

Categories

Tech |