அரிசி மற்றும் கோதுமை கொள்முதலில் தமிழ்நாடு பற்றாக்குறை மாநிலமாக உள்ளதாக இந்திய உணவுக் கழகம் தெரிவித்துள்ளது. இதனை சமாளிப்பதற்காக பஞ்சாப், ஹரியானா,ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து அரிசி மற்றும் கோதுமை ரயில் மூலம் பெறப்படுவதாகவும், பிரதமரின் இலவச உணவு திட்டத்தின் கீழ் இந்திய உணவுக் கழக சென்னை பிரிவு 1.9 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் 0.17 மெட்ரிக் டன் கோதுமையை வழங்கி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இக்கிடங்குகள் முலம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஒரு வருட தேவைக்கும் மேலான உணவு தானியம் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 24 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மாதம் தோறும் பயன் பெறுகின்றனர்.