Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உயரும் விலை… முடங்கும் தமிழகம்… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மருந்து பொருட்கள் முதல் மளிகை பொருட்கள் வரை விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன. அதன்பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அதனால் மக்கள் அனைவரும் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் டீசல் விலை உயர்வு காரணமாக பார்சல் லாரி வாடகை 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் லாரி வாடகை உயர்வால் மருந்து பொருட்கள், மளிகை பொருட்கள், கட்டுமான பொருட்களுக்கு தேவையான கம்பிகள், சிமெண்ட் மூட்டைகள் போன்றவற்றின் விலை உயர அதிகம் வாய்ப்புள்ளது. மேலும் விலை உயர்வை கண்டித்து தென் மாநில லாரி உரிமையாளர்கள் சார்பில் பிப்ரவரி 26-ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நடந்தால் தமிழக மக்களின் வாழ்க்கை முடங்கும் அபாயம் ஏற்படும்.

Categories

Tech |