ஆட்டோ கட்டணத்தை விரைவில் மாற்றி அமைக்க வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சரிடம் உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றியமைத்து விரைவில் அறிவிக்க வேண்டும், கேரள அரசைப் போல் தமிழக அரசும் வாடகை வாகன முன்பதிவு செயலியைத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை நேரில் சந்தித்த உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்க நிர்வாகிகள், விரைவில் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்படும் என்றும் தமிழக அரசு சார்பாக விரைவில் செயலி தொடங்கப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் உறுதி அளித்ததாக தெரிவித்தனர்.எனவே இதிலிருந்து விரைவில் தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயரும் என தகவல் வெளியாகி உள்ளது.