தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உறுதிப்படுத்த ஆசிரியர்கள் தேவை என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் தமிழக பள்ளிகளில் உறுதிப்படுத்த ஆசிரியர்கள் தேவை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். உருது பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தமிழகத்தில் இல்லை என்றும், மாணவர்களுக்கு உருது மொழி கற்பிக்க ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.