பிரிட்டனிலிருந்து தஞ்சை வந்த மூன்று பேருக்கு உருமாறிய கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பிறநாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது.
இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாறியுள்ளது புதிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். அங்கிருந்து இந்தியா 40க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பிரிட்டனிலிருந்து தஞ்சை வந்த மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் இருந்து வந்த 53 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.