Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் – முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்த உள்ளார். தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த அவசர ஆலோசனையில் பங்கேற்கின்றனர். மாவட்ட பிரிப்பால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தவும், டிசம்பருக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தமிழகம் முழுவதும் நடத்தி முடிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

Categories

Tech |