தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வு பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெற்றோர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது.
பெரும்பாலும் கல்லூரிகளும் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் சில பள்ளிகளில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கல்லூரிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்படாமல் பொதுத்தேர்வு கருதி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது
இந்நிலையில் தமிழகத்தில் மே 3ஆம் தேதி முதல் பிளஸ் டூ மாணவர்களுக்கு பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் பிளஸ் டூ மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுக்கு முன் சமர்ப்பிக்க வேண்டிய செய்முறை விளக்க குறிப்பு நோட்டுகளை, மாணவர்களிடம் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மதிப்பெண் பட்டியல் விவரங்களை ஏப்ரல் 15 முதல் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பதிவுகளை ஏப்ரல் 28 க்குள் தேர்வுத்துறையில் சமர்ப்பிக்க வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.