Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உள்ள கனிம சுரங்கங்களுக்கு…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழ்நாட்டில் ஏராளமான கனிம சுரங்கங்கள் உள்ளது. அவற்றின் நடவடிக்கைகளை ட்ரோன் மூலமாக கண்காணிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சுண்ணாம்புக்கல் எடுப்பதற்காக செலுத்தும் உரிமை தொகையை அரசு உயர்த்தியது. அந்த உத்தரவை எதிர்த்து சிமெண்ட் ஆலை தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மதுக்கரை ஏசிசி சிமெண்ட் தயாரிப்பு நிறுவனம் வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் போது, நீதிபதி கூறியதாவது, சுரங்கங்கள், கனிமங்கள் நம் நாட்டினுடைய செல்வங்கள். பேராசை கொண்ட சிலர் பணம் சம்பாதிப்பதற்காக நம் நாட்டின் செல்வங்களை சுரண்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே தமிழகம் முழுவதும் உள்ள கனிமச் சுரங்கங்களின் நடவடிக்கைகளை ட்ரோன் மூலமாக கண்காணிக்க வேண்டும். தொடர்ந்து சுரங்கங்களுக்கு உரிமை தொகையை நிர்ணயிக்கும் தொகையை ட்ரோன் மூலம் அளவிட வேண்டும். மேலும் தொழில் வளர்ச்சியை ஆதரிக்கும் அதே சமயத்தில் தேசத்தில் செல்வமும், பொதுநலனும் பாதுகாக்கப்படுவது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |