தமிழகத்தில் உள்ள 2 கல்லூரிகளுக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கும் பணி மற்றும் கருணாநிதியின் விருப்பமான மதுரையில் நவீன நூலகம் அமைக்கும் பணி ஆகியவை தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் தற்போது குளித்தலையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி க்கு டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரி எனவும், அதனைப்போலவே புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியும் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரி எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.