தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இடைநிலை மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் அண்மையில் இடைநிலை ஆசிரியர்களுக்கான டெட் தாள் 1 தேர்வு கணினி மூலமாக நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து இரண்டாம் தாள் தேர்வு நடைபெற உள்ளது.இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் இருக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டுக்கு முன்பாக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் ஆசிரிய ர் தகுதி பெறவில்லை என்று குற்றச்சாட்டை எழுந்தது. இதனை ஆராய்ந்து உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
தற்போது பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,கடந்த 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு முன்பு தமிழக ஆசிரியர் ஆட்கள் சேர்த்து வாரியம் மூலமாக அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளது.அதே சமயம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனியாக பணி வரன்முறை செய்ய வேண்டிய அவசியம் கிடையாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.