தமிழகத்தில் உள்ள பெரிய நந்தி உள்ள கோயில் பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம்.
தமிழ்நாட்டிலுள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தின் திருவாவடுதுறை எனும் ஊரில் புராண பெருமைகள் நிறைந்த கோமுக்தீசுவரர் கோயில் அமைந்துள்ளது . மயிலாடுதுறையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறை – கும்பகோணம் இரயில் மார்க்கத்தில் உள்ள நரசிங்கன்பேட்டை இரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே 3 கிலோமீட்டர் தொலைவிலும் இத்தலம் இருக்கிறது.
மயிலாடுதுறை – கும்பகோணம் சாலை வழியில் உள்ள திருவாலங்காடு என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி 1 கிலோமீட்டர் நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம். சிவபக்தரான திருமாளிகைத் தேவர் மீது படையெடுத்து வந்த நரசிங்க மன்னனுடன் போரிட்டு அவரைத் தோற்கடிப்பதற்காக அம்பிகை திருவாவடுதுறை கோயில் மதில் மீது இருந்த நந்திகளனைத்தையும் ஒரே நந்தியாக்கி அனுப்பியதால் இன்றளவும் இத்திருக்கோயில் மதில் மீது நந்திகள் கிடையாது.
சிவபெருமானே சகல தோஷங்களும் நிவாரணமாக இருப்பதால் இத்திருக்கோயிலில் நவக்கிரகங்களுக்கு தனிச் சன்னதி கிடையாது. திருஞானசம்பந்தர் தமது தந்தையின் வேள்விக்காக சிவபெருமானிடம் ஆயிரம் பொற்காசுகள் பெற்ற திருத்தலம் முப்பத்து முக்கோடி தேவர்களும் படர் அரச மரமாக இருக்க அம்மரத்தின் கீழ் சிவபெருமான் திருநடனம் புரிந்த திருத்தலம். தமிழகத்திலேயே பெரிய நந்தி, தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள நந்தி என்று தான் நினைத்திருப்பீர்கள். ஆனால் மயிலாடுதுறையில் இருந்து 14 கி.மீ, துாரத்திலுள்ள திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயில் நந்தி தான் மிகப் பெரியது.