Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகள் அனைத்தும்…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு…..!!!!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் புதிய பேருந்து நிலையத்தை 45 கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பேருந்து நிலையத்தில் உருவமைப்பில் மாற்றங்களை செய்ய அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுக்கு அவர் உத்தரவிட்டார். இதனையடுத்து அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, வேலூர் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை பார்த்தால் கொரோனா வந்தது போல் இருக்கிறது.

அந்த பேருந்து நிலையத்தை தாறுமாறாக கட்டி வருகின்றனர். இதில் பக்கத்திலுள்ள தனியார் இடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்திலேயே பேருந்து நிலைய வடிவமைப்பு உள்ளது. இதன் காரணமாக மழை காலத்தில் பேருந்து நிலையத்தில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்படும். இதனை தவிர சில மாற்றங்கள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது புதிய பேருந்து நிலையத்தில் 2 நுழைவு வாயில்கள் அமைக்கப்படும். நுழைவு வாயில் அருகில் எவ்வித கடைகளும் கட்டக்கூடாது. மேலும் கழிவறைகள் நவீன முறையில் கட்டி முடிக்க வேண்டும். இதனிடையில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்வேன். அப்போது முறைகேடாக கட்டப்படுவது தெரியவந்தால் சிபிசிஐடி மூலமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு தவறு செய்த அதிகாரிகள் உட்பட அனைவர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வேலூர் கிரீன்சர்க்கிள் ரவுண்டானா இருக்கும்வரை அவ்விடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள ஹோட்டல்கள், கடைகள் முன் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வேலூர் சிஎம்சி மருத்துவமனை அருகில் மேம்பாலம் அமைப்பது தொடர்பாக நீண்ட நாட்களாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. வேலூர் ஆட்சியர் அலுவலகம், காங்கேயநல்லூர் இடையில் பாலாற்றின் குறுக்கே பாலம் அமைப்பது குறித்து முன்பே திட்டமிடப்பட்டுள்ளது. அவ்விடத்தில் பாலம் அமைத்தால் பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலானது குறையும்.

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் முடிக்கப்படாமல் வேலூர் மாநகரம் முழுவதும் சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறது. எனது காட்பாடி தொகுதியிலேயே இந்த நிலைதான் இருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பதற்கு முன்பாக ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை முடித்துவிட வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மணல் குவாரிகள் திறக்கப்படாததால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. ஆகவே மணல் குவாரிகளை இயக்குவது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும். மேலும் எடப்பாடி பழனிச்சாமி கூறுவதுபோல் தமிழகத்தில் எந்த பகுதியிலும் உரிமம் இன்றி கல்குவாரிகள் இயங்குவதும் இல்லை, வெளிமாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொள்ளை போவதுமில்லை. இவை கடந்த அதிமுக ஆட்சியில் தான் நடந்து வந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும் அவற்றை ஒழுங்குபடுத்தி உள்ளோம் என்று கூறினார்.

Categories

Tech |