Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊதியத்தை குறைக்க உத்தரவு… அரசு அதிர்ச்சி…!!!

அரசு ஊழியர்களுக்கு திடீரென சம்பளத்தை குறைத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வேளாண் துறையில் பல்வேறு நிலையில் உள்ள ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர ஊதியத்தை மாற்றி அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், “வேளாண்மை அலுவலர் பதவிகளில் இருப்பவர்கள் மாதாந்திர ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து மாதாந்திர ஊதியம் 15,000 வரை குறையும் என்ற நிலை உண்டாகியுள்ளது. முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் ஊதிய குறைதீர்க்கும் குழு அமைக்கப்பட்டு, அதன்பிறகு ஊதிய கட்டமைப்பில் உள்ள குறைபாடு பற்றி ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

அதனை அடிப்படையாகக் கொண்டு பல துறை அரசு ஊழியர்கள் சம்பளத்தை மாற்றி அமைப்பதற்கு தமிழக அரசு சார்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அரசாணையில் வேளாண்மைத் துறையில் வேளாண்மை அலுவலர்கள் உட்பட பலருக்கு அடிப்படை சம்பளத்தை குறைத்து நிர்ணயம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தில் உயிரையும் பெரிதாக கருதாமல் பணியாற்றிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர்கள் உட்பட பலருக்கு அடிப்படை சம்பளத்தை குறைத்து நிர்ணயம் செய்ய உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |