தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உயர் கல்வித் தகுதி அடிப்படையில் ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஊழியத்தை ரத்து செய்து கடந்த ஆண்டு மார்ச் 10ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து அக்டோபர் 15-ஆம் தேதி தமிழக அரசு மீண்டும் அரசாணை வெளியிட்டது. அதில் கடந்த வருடம் மார்ச் 10 க்கும் முன்னதாக உயர்கல்வி படித்து தகுதியின் அடிப்படையில் ஊக்க ஊதிய உயர்வு வழங்கலாம் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில் தமிழக அரசின் பொதுப்பணித் துறையில் உயர்கல்வி படித்தவர்களுக்கு அட்வான்ஸ் ஊதிய உயர்வு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிஇ முடித்து பணியில் சேர்ந்தவர்கள் பணியில் இருந்துகொண்டே முதுகலை முனைவர் படிக்கின்றனர். அவ்வாறு படிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வித் தகுதியின் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.