Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள்…. சென்னை புறநகர் ரயில்சேவை அதிகரிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகளை தொடர்ந்து சென்னையில் புறநகர் ரயில்சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் ரயில் சேவை அதிகரிக்கபடுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை 34 ரயில்கள் சேவையும், சென்னை கடற்கரை முதல் தாம்பரம், செங்கல்பட்டு,திருமால்பூர் ஆகிய இடங்களுக்கு 88 ரயில்கள் சேவையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |