தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு காரணமாக கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப் பட்டிருந்தது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. தற்போது தொற்று பாதிப்பு குறைய தொடங்கியதை தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளின் முழுவதும் தளர்த்துவது குறித்து முதல்வர் தலைமையில் உயர்மட்டக்குழு ஆலோசனை நடத்த உள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது. பெரிய அளவில் கட்டுப்பாடுகள் எதுவும் தற்போது இல்லை எனினும் அண்டை மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றார்.