Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு…. இ-பாஸ் நடைமுறை…. புதிய உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே ஊரடங்கை ஜூன்-28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து  மேலும் ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஓசூர் பேருந்து நிலையத்திலிருந்து 50% பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து ஓசூர் – பெங்களூர் இடையே பேருந்துகள் இயக்கப்படாததால் சிலர் ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்று கர்நாடக எல்லையைக் கடந்து அம்மாநில பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். இதனால் வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ-பாஸ் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |