தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பாதிப்பு குறைவான 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜூன் 28ஆம் தேதி வரை புதிய தளர்வுகள் உடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் அளிப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். மூன்று வகையாகப் பிரிக்கப் பட்ட மாவட்டங்களில் 28ம் தேதியுடன் ஊரடங்கு முடிவதால் ஆலோசனை நடத்துகிறார். ஆலோசனைக்கு பிறகு மாலை அல்லது நாளை மறுநாள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.