தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இனி வருகின்ற பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதன் காரணமாக நோய்தொற்று பரவக் கூடும் அபாயம் அதிகமாக உள்ளது. அதனால் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அளித்துள்ள கட்டுப்பாடுகள் அக்டோபர் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சமுதாயம், அரசியல், கலாச்சார நிகழ்வுகள், திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். பண்டிகை காலம் வருவதால் மக்கள் கூடும் இடங்களில் மட்டும் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விஜயதசமிக்கு கோவில் திறப்பு குறித்தும் நாளை ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நாளை ஆலோசனை முடிந்த பிறகு மாலை அல்லது நாளை மறுநாள் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.