Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை – சற்றுமுன் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்காக மே 10 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து அடுத்தடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்ததன் காரணமாக பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல சலுகைகளையும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்து வருகிறார்.

அந்த வகையில் தளர்வுகள் குறைவாக உள்ள 11 மாவட்ட மருத்துவமனைகளுக்கு அறநிலையத் துறை வாயிலாக உணவு தொடர்ந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 11 மாவட்டங்களில் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் உள்ளிட்ட உணவு தேவைப்படும் நபர்களுக்கு வரும் 21-ஆம் தேதி வரை உணவு வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |