தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது.அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் சிலர் உண்பதற்கு உணவு இல்லாமல் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அரசும் பல நிவாரணங்களை வழங்கி வருகிறது.
இந்நிலையில் கடந்த மே மாதம் 10ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து சாலைகளில் வசிக்கும் ஆதரவற்ற மக்களுக்கு தஞ்சாவூர் விஜய் மக்கள் இயக்கத்தினர் தொடர்ந்து விலை இல்லா உணவு அளித்து வருகின்றனர். ஆங்காங்கே சாலைகளிலும் அரசு மருத்துவமனை அருகிலும் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் தவறாது உணவளித்து மக்களின் பசியை தீர்க்கின்றனர்.