Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் எக்ஸ்இ வகை கொரோனா…. மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு….? வெளியான தகவல்….!!!!!

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாத இறுதியில் கொரோனா  வைரஸ் தொற்று நோயின்  தாக்கம் குறைந்ததன் காரணமாக பல்வேறு தளர்வுகள்  அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தினசரி பாதிப்பும்  தொடர்ந்து குறைந்து கொண்டு வருகிறது. இதற்கிடையில் ஐரோப்பிய நாடான பிரிட்டனில்  எக்ஸ்இ வகையான தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. அது அதிவேகமாக பரவக்கூடியது என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

அண்மையில் மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் வதோதராவுக்கு வந்த முதியவர் ஒருவருக்கு எக்ஸ்இ வகையான தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தமிழகத்திலும் எக்ஸ்இ வகைகள் பெற்று கண்டறியப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. இது குறித்து விளக்கமளித்த சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உருமாறி வரும் குறித்து மாறி மாறி தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இதுவரை தமிழகத்தில் எக்ஸ்இ போன்ற வைரஸ் தொற்று எதுவும் இல்லை.BA 2 மைக்ரேன் வகை தான் தமிழகத்தின் இருக்கிறது என கூறியுள்ளார். இந்த நிலையில் இன்று மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் அரசு மருத்துவமனையில் விபத்து ஏற்பட்டு இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலமாக சிகிச்சையில் உள்ளவர்களை சந்தித்து தமிழக அரசு சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் நலம் விசாரித்துள்ளார். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புதிதாக பரவி வரும் XE வைரஸ் தொற்று குறித்து பீதி அடைய தேவையில்லை. தமிழகத்தில் உருமாறிய XE வைரஸ் தொற்று இதுவரை கண்டறியப்படவில்லை” என கூறியுள்ளார்.

Categories

Tech |