தமிழகத்தில் கொரோனா காரணமாக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை தடுக்கும் விதமாக ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதல் எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் 2025 ஆம் ஆண்டுக்குள் எட்டு வயதிற்கு உட்பட்ட அனைவரும் என்ன அறிவும் எழுத்தறிவும் பெற வேண்டும் என்பது முக்கிய நோக்கம்.
மாணவர்களுக்கு ஆக்டிவிட்டி சார்ந்த கற்றல், கற்பித்தல் நடவடிக்கையில் பாடங்கள் கற்றுத் தரப்படும்.மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் விளையாட்டு வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு எண்கள் எழுத்துக்களை அறிமுகம் செய்தல், பிழையின்றி வாசித்தல்,எழுதுதல் மற்றும் அடிப்படை கணிதம் உள்ளிட்டவை கட்டாயம் மாணவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்கள் அடுத்த வகுப்பிற்குள் நுழையும் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பாடத்திட்டத்தில் மாற்றத்தை கொண்டு வர ஆசிரியர்களுக்கான கருத்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக ஆசிரியர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டு பாடத்திட்டத்தில் புதிய நடைமுறை கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது.அரசின் இந்த புதிய நடவடிக்கையால் மாணவர்கள் பாடங்களை சிக்கலின்றி படிக்க ஏதுவாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.