தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற 12-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளித்து முதல்வர் உத்தரவிட்டார். இந்த ஊரடங்கில் கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டன.
இந்நிலையில் வருகிற 12ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் 19ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் சில தளர்வுகள் அழிக்கப்பட்டுள்ளன. ஆனால் பள்ளி, கல்லூரிகள் திறக்க தடை தொடரும். மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், சமுதாயம் அரசியல் சார்ந்த கூட்டங்கள் நடத்த தடை தொடரும். மாநிலங்களுக்கிடையேயான தனியார், அரசு பேருந்து போக்குவரத்துக்கு தடை தொடரும். திரையரங்குகள் திறக்க தடை என்றும் உத்தரவிட்டுள்ளார்.