Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்கள்?… இடியுடன் கூடிய கனமழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவிக் கொண்டு இருப்பதால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மதுரை, தேனி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் தென்மேற்கு அரபிக் கடல் பகுதியில் சூறாவளி காற்று 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்” என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |