தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கான வானிலை முன்னறிவிப்பானது வெளியாகியுள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியின் மேல் நிலவும் வளிமண்டலத்தில் சுழற்சியின் காரணமாக நாளை (மார்ச் 8) அன்று தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல் மார்ச் 9 முதல் மார்ச் 11 வரை தமிழகம் , புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஆனால் நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதை எடுத்து அதிகபட்ச வெப்பநிலையாக 32 டிகிரி செல்சியஸ் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 22 டிகிரி செல்சியஸில் ஒட்டி இருக்கும் என தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். மேலும் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் முதல் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும். ஆனால் மீனவர்களுக்கான எந்தவித எச்சரிக்கையும் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் பதிவாகியுள்ள மழையின் அளவு சென்டி மீட்டரில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை, சீர்காழி (மயிலாடுதுறை) தலா 5, மதுக்கூர் (தஞ்சாவூர்), சிதம்பரம் (கடலூர்) தலா 4, அதிராமபட்டினம் (தஞ்சாவூர்), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), அண்ணாமலை நகர் (கடலூர்), மன்னார்குடி (திருவாரூர்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), காரைக்கால், வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) தலா 3, நீடாமங்கலம் (திருவாரூர்), நாகப்பட்டினம், புவனகிரி (கடலூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்), மஞ்சளாறு (தஞ்சாவூர்), திருவாரூர், திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), ஒர்த்தநாடு (தஞ்சாவூர்), கடலூர் தலா 2, திருப்பூண்டி (நாகப்பட்டினம்), மரக்காணம் (விழுப்புரம்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), மணல்மேடு (மயிலாடுதுறை), காட்டுமன்னார் கோயில் (கடலூர்), நன்னிலம் (திருவாரூர்), வலங்கைமான் (திருவாரூர்) , பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) , புதுச்சேரி, திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), பண்ருட்டி (கடலூர்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), வனமாதேவி (கடலூர்), புத்தனார் அணை (கன்னியாகுமரி) தலா 1.